ஓடும் பேருந்தில் பிறந்த 2 குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று சலுகை வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுவாரசியமான, பாராட்டும் விதமாக ஒரு சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானாவின் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஓடும் பேருந்தில் பிறந்தவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல் குழந்தை கடந்த மாதம் 30-ஆம் தேதி நாகர் கர்னூல் டெப்போவுக்கு உட்பட்ட பெத்தகோதபள்ளி கிராமத்தில் பிறந்துள்ளது.
மற்றொரு குழந்தை ஆசிபாபாத் பாதிப்புக்கு உட்பட்ட சித்தி பேட்டில் பிறந்துள்ளது. இந்த 2 குழந்தையும், தாய்மார்கள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு பேருந்தில் சென்ற போது வலி அதிகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து பணியாளர்களும் பொதுமக்களும் பிள்ளையை பாதுகாப்பாக பெற்றெடுக்க உதவினர். அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தாயும், சேயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தற்போது அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.