Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…… இந்த படத்தில் நடித்ததற்கு தான் ரூ.500 சம்பளம் வாங்கினாரா பிரபுதேவா…….?

பிரபுதேவா 500 ரூபாய் சம்பளம் பெற்று நடித்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான திரைப்படம் ”பொன் மாணிக்கவேல்”. இதனையடுத்து, இவர் நடிப்பில் ‘பஹீரா’, ‘தேள்’ போன்ற படங்கள் ரிலீஸாக காத்திருக்கின்றன.

Watch Mouna Ragam | Prime Video

இந்நிலையில், இவர் 500 ரூபாய் சம்பளம் பெற்று நடித்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ”மௌன ராகம்” படத்தில் ‘பனி விழும் இரவு’ என்ற பாடலில் ஒரு சில காட்சியில் தோன்றியிருப்பார். அதில் நடித்ததற்காக தான் இயக்குனர் மணிரத்னம் அவருக்கு 500 ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |