Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா 32 ஆயிரம் கோடி…. கல்விக்காக ஒதுக்கிய முதல்வர்….அமைச்சர் பெருமிதம்….!!

முதல்வர் பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி பவள விழாவை துவக்கி வைத்தார் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன். அப்போது பேசிய அவர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக முதல்வர் அவர்கள் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்துள்ளதாக கூறினார். மேலும் அழகப்பரால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரி தற்போது இந்த அளவிற்கு பெயர் வாங்கி இருப்பது ஒரு பெரிய விஷயம் என்று கூறினார். மேலும் காரைக்குடி கல்விக்குப் பெயர் போன ஊராக திகழ்வதற்கு கொடை வள்ளல் அழகப்பர் தான் முக்கிய காரணம் என்று கூறினார். வெறும் நான்கு வகுப்பறைகளுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் இப்போது தேசிய அளவில் 75 ஆவது இடத்தில் உள்ளது ஒரு பெரிய விஷயம் என கூறினார். பேசிய அவர் கல்விக்காக முதலமைச்சர் அவர்கள் 32 ஆயிரம் கோடி ஒதுக்கி இருப்பதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தென்னவன் கொடை வள்ளலான அழகப்பரின் ஒரு சிறிய நன்கொடையின் மூலம் தொடங்கப்பட்டதே இந்த கல்லூரி இன்று பல்வேறு மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்து இந்த கல்லூரி தான் எனக் கூறினார். இந்த விழாவை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, சட்டமன்ற உறுப்பினர்கள் மாங்குடி, தமிழரசி, மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் வைரமுத்து அன்பரசு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று நடத்தி வைத்தனர்.

Categories

Tech |