வாட்சப் நிறுவனம் தற்போது புதிதாக ஒரு வசதியை கொண்டுவந்துள்ளது .
சமூக வலைத்தளங்களில் அதிக பயனாளர்களைக் கொண்டுள்ள செயலி வாட்சப் . தற்போது புதிய அப்டேட்டை வெளியிட்டு கொண்டிருக்கிறது . சமீபத்தில் Fingerprint வசதியை புதிதாக சேர்த்தும் , ஏற்கனவே வாட்சப் குரூப்களில் இருந்த Nobady ஆப்ஷனை விலக்கியும் புதிய அப்டேட்டை வெளியிட்டது.
இந்த நிலையில் புதிதாக கால் வெயிட்டிங் என்றபுதிய வசதியை வெளியிட்டுள்ளது . இது கண்டிப்பாக வாட்சப் காலை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது . இதன் மூலம் நீங்கள் ஒருவரிடம் பேசும் போது இடையில் வரும் புதிய அழைப்பை தொடரவோ அல்லது ஏற்கனவே உள்ள இணைப்பை துண்டிக்கவோ முடியும்.ஆனால் யாரையாவது ஒருவரை “hold” வைப்பது கஸ்டம் .சென்ற மாதம் ஐபோன்களில் உபயோகப்படுத்தப்பட்ட இந்த வசதி இப்போது ஆண்ட்ராய்டு போன்களிலும் வந்துள்ளது . இந்த வசதி நீங்கள் வட்சப்பை அப்டேட் செய்து அக்கோன்ட் , பிரைவசி , குரூப்ஸ் என்ற ஆப்ஷனில் பெறலாம்.