மளிகைக்கடையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ளஇருக்கூரில் அக்பர் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மளிகை கடையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் காவல்துறையினர் அக்பர் உசேன் கடைக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1/2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அக்பர் உசேனை கைது செய்து கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.