Categories
மாநில செய்திகள்

BREAKING : “எவ்வளவு பணிபுரிய முடியுமோ, அதையும் தாண்டி செய்தார்”…. முதல்வருக்கு நீதிமன்றம் பாராட்டு….!!!!

தமிழ்நாடு முதல்வரின் செயலை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பாராட்டியுள்ளார்.

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய தமிழக அரசின் மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி புகழேந்தி ” தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எவ்வளவு பணிபுரிய முடியுமோ அதையும் தாண்டி பணியாற்றிவருகிறார். முதல்வரின் பணியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் பணிக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. திமுக கட்சி தொண்டர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |