உலக சுகாதார மையம் ஓமிக்ரான் தொற்று, தற்போது 57 நாடுகளில் பரவி வருவதாக தெரிவித்திருக்கிறது.
தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்று அதன்பின்பு, பல நாடுகளில் பரவத்தொடங்கியது. இந்நிலையில், தற்போது சுமார் 57 நாடுகளில் ஒமிக்ரான் பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது.
டெல்டா வைரஸை விட ஒமிக்ரான் வைரஸ் குறைந்த பாதிப்பை தான் ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், அதிகப்படியாக ஒமிக்ரான் வைரஸை பரவ விடாமல் தடுப்பதற்காக தடுப்பூசியளிக்கும் பணியை தீவிரப்படுத்த உலக சுகாதார மையம், உலக நாடுகளை அறிவுறுத்தியிருக்கிறது.