சேன்ஸலர் பதவியிலிருந்தும் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்தும் ஏஞ்சலா மெர்க்கல் ஓய்வு பெற்றார்.
ஜெர்மனியின் முதல் பெண் சேன்ஸலர் மட்டுமின்றி நான்கு அமெரிக்க அதிபர்கள் மற்றும் ஐந்து பிரித்தானிய பிரதமர்களை தனது ஆட்சிக்காலத்தில் கண்டவர் என்ற பெருமைக்குரியவர் 67 வயதான ஏஞ்சலா மெர்க்கல். இவரின் 16 ஆண்டுகால ஆட்சியில் ஜெர்மனியின் வளர்ச்சியானது பன்மடங்கு உயர்ந்ததோடு மட்டுமின்றி ஐரோப்பா மற்றும் ஒட்டு மொத்த உலக நாடுகளுக்குமிடையே ஒரு நல்ல உறவை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக பொருளாதார சக்தி மிகுந்த நாடாகவும் ஐரோப்பாவின் தலைமையிடமாகவும் ஜெர்மனியை உருவாக்கினார்.
இவர் கிழக்கு ஜெர்மனியில் வாழ்ந்த ஒரு போதகரின் மகளாவார். மேலும் இவர் ஒரு இயற்பியலாளர். அதாவது பெர்லின் சுவர் தாக்கப்பட்ட சமயத்தில் தனது அரசியல் வாழ்வில் காலடி எடுத்து வைத்தார். அதிலும் Helmut Kohl என்பவர் ஜெர்மன் சேன்ஸலராக ஆட்சி புரியும் பொழுது அமைச்சரவையில் கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த அரசியல்வாதிகள் எவரும் இல்லை என்பதற்காக அந்த இடத்தை நிரப்புவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ஏஞ்சலா மெர்க்கல். இவர் முதல் பெண் சேன்ஸலராக மாறுவார் என்று எவரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
மேலும் நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏஞ்சலா மெர்க்கலின் புகழ் பரவியது. அதிலும் சிரியா அகதிகளுக்காக ஜெர்மனியின் கதவை திறந்துவிட்ட போது உலகளவில் பேசப்பட்டார். இருப்பினும் சொந்த நாடான ஜெர்மனியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதாவது அகதிகள் என்ற பெயரில் குற்றவாளிகளும் பொருளாதாரத்தை பெருக்கி கொள்வதற்காக வந்த சுயநலவாதிகளும் ஜெர்மனிக்குள் நுழைந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு புத்தாண்டிற்கு முந்தைய நாள் 1,200 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். இந்த குற்ற சம்பவத்திற்கு காரணம், அந்த ஆண்டில் அகதிகளாக வந்தவர்கள் என்று தெரிய வந்தது. இதனால் வெளிநாட்டவர்கள் மீது வன்முறை வெடித்தது. மேலும் கொரோனா தொற்று காலத்திலும் பெருவெள்ளம் வந்தபோதிலும் அதனை சரியாக கையாளவில்லை என்று மக்கள் அவர் ஆட்சியின் மீது அதிருப்தி அடைந்தனர். இதன் காரணமாக ஏஞ்சலாவின் செல்வாக்கு படிப்படியாக குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் எவரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது 16 ஆண்டுகால பதவியையும் கட்சியின் தலைமை பொறுப்பையும் துறக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் தன் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். இதனை அடுத்து ஏஞ்சலாவின் அரசியல் வாரிசும் முன்னாள் நிதி அமைச்சருமான Olaf Scholz புதிய சேன்ஸலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குறிப்பாக அவரிடம் 30 ஆண்டுகால அரசியல் வாழ்விற்கு பின்னர் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்தற்கு “கொஞ்சம் படிக்க வேண்டும்; கொண்டு தூங்க வேண்டும்” என்று பதிலளித்துள்ளார்.