Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பர்சனல் லோன் வாங்கப் போறீங்களா?…. கட்டாயம் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க…. இதோ உங்களுக்கான பதிவு….!!!!

வங்கிகள் மட்டுமல்லாமல் பல்வேறு நிதி நிறுவனங்களும் தனிநபர் கடன்களை வழங்கி வருகின்றனர். மேலும் வாகனங்கள் வாங்குவதற்கும், தற்போது வாகன கடன்களை வங்கிகள் வழங்கி வருகிறது. சில காலங்களுக்கு முன்னர் வாகனம் வாங்குபவர்களுக்கு கடன் கிடைக்காமல் கார் பர்ஸ்னல் லோன் வாங்கும் வழக்கம் இருந்தது. தனிநபர் கடனை எந்த நோக்கத்திற்கும் உபயோகப்படுத்தலாம். ஆனால் கார் கடனை கார் வாங்குவதற்கு மட்டுமே உபயோகப்படுத்த முடியும். இந்த 2 கடன்களுக்கு மான வேறுபாடுகள் என்ன என்பதை கீழே பார்க்கலாம். தனிநபர் கடனில் ஒரு மிகப்பெரிய நன்மை என்னவென்றால் கடன் தொகையை உபயோகப் படுத்துவதில், எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. மேலும் கடன் தொகையை எந்த நோக்கத்திற்காகவும் உபயோகப்படுத்தலாம்.

அதுமட்டுமல்லாமல், மாதத்தவணைகளை உங்கள் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளும் விருப்பமும், தள்ளுபடிகளும் உண்டு. எந்த செக்யூரிட்டி டெபாசிட் இல்லாமல் நீங்கள் வருமானத்தின் அடிப்படையிலேயே எளிதாக கடன் வாங்க முடியும். குறைந்தபட்ச கடன் தொகையாக 50,000 ரூபாய் கூட வங்கியில் வாங்கலாம். இது பாதுகாப்பற்ற கடன் என்பதால், தனிநபர் கடன் அல்லது தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். மேலும் கடனுக்கான உங்கள் தகுதியை தீர்மானிப்பதில் கிரெடிட் ஸ்கோர் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக கிரெடிட் ஸ்கோர் உங்களிடம் இருந்தால் மட்டுமே, தனிநபர் கடனுக்கு நீங்கள் தகுதியானவர்களாக இருக்க முடியும்.

மேலும் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதிக கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களை வழங்குகின்றனர். அதனால் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்க வேண்டும். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 750-க்கும் குறைவாக இருந்தால், அதை அதிகப்படுத்துவதற்கு உண்டான வழியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750-க்கு அதிகமாக இருந்தால், குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் பெறலாம். இதையடுத்து கார் கடன்களுக்கு பொதுவாக குறைந்த வட்டி விகிதங்கள் இருக்கும். அதை மிக எளிதாக நீங்கள் பெறலாம்.

அது மிகவும் பாதுகாப்பான கடனாக இருப்பதால், சராசரி கிரெடிட் ஸ்கோர் உள்ள அனைத்து நபரும் கார் கடனுக்கு தகுதியானவர்கள் ஆவார். மேலும் நீங்கள் கார் கடன் வாங்கும்போது, காரின் விலையில் 10 முதல் 20 சதவிகிதம் வரை முன்பணம் செலுத்த வேண்டியிருக்கும். தொடர்ந்து அனைத்து கடன் தொகைகளையும் முடித்த பின்னரே காரின் முழு உரிமையையும் பெறமுடியும். மேலும் கார் கடன்களை பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை, ஏராளமான கடன்கள் காரின் ஆன் ரோடு விலை சமமான கடன்களை வழங்குகிறது. சில கார் கடன்கள் ஆன்ரோடு விலையில் 100% வரை கடன்களை வழங்குகிறது. அதாவது, முன் பணம் செலுத்தாமல் கடனைப் பெறலாம்.

ஆனால் இந்தியாவில் ஏராளமான கடன்கள் அனைத்தும் பாதுகாப்பான கடன்கள்தான். ஏனெனில், கடனுக்கான பிணமாக கார்களை செயல்படுகிறது. இதையடுத்து, குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களும் எளிதில் கடன் பெறலாம். ஆனால் இதற்கு ஒவ்வொரு வங்கிக்கும் கார்கடன் வழங்குவதில் வெவ்வேறு கொள்கைகள் இருக்கிறது. இந்தியாவில் கார் கடன்கள் பெரும்பாலும் நிலையான வட்டி விகிதத்தில் வழங்குகின்றன. பல்வேறு வங்கிகள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் வட்டி விகிதங்களை தீர்மானிக்கின்றன. அதனால் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற அதிக மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.

கார் கடன்கள் புதிய கார்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல், பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கும் கடன் பெறலாம். பெரும்பாலான கடன்களைப் போலவே 750-க்கும் அதிக கிரெடிட் ஸ்கோர் எப்போதும் சிறப்பான ஒன்று. எனினும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 600-க்கு அதிகமாக இருந்தாலும் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைவாக இருந்தால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படலாம்.

இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் வழங்கும் கார் கடன் வட்டி விகிதங்கள்:

· பேங்க் ஆஃப் பரோடா – 7.00%
· கனரா வங்கி – 7.30%
· ஆக்சிஸ் வங்கி – 7.45%
· பெடரல் வங்கி – 8.50%
· எஸ்பிஐ – 7.20%
· ஐசிஐசிஐ வங்கி – 7.90%

இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன் வட்டி விகிதங்கள்:

· பாரத ஸ்டேட் வங்கி – 9.60% முதல் 15.65%
· ஐசிஐசிஐ வங்கி – 10.5% முதல் 19%
· HDFC வங்கி – 10.5% முதல் 21.00%
· யெஸ் வங்கி – 13.99% முதல் 16.99%
· சிட்டி பேங்க் – 9.99% முதல் 16.49%
· ஆக்சிஸ் வங்கி – 12% முதல் 21%
· பாங்க் ஆஃப் பரோடா – 10.50% முதல் 12.50%
· HSBC வங்கி – 9.75% முதல் – 15.00%

மேலும் கார் கடன் பெறுவதற்கான தகுதி மற்றும் ஆவணங்கள் கடனுக்கான தகுதி அளவுகோல்கள் வெவ்வேறு வங்கிகளுக்கு வேறுபட்டதாக இருக்கும்.
அதில் சில பொதுவான அளவுகோல்கள் கீழ்வருமாறு,
விண்ணப்பதாரர் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச மாத வருமானம் 20,000 ரூபாயாக இருக்க வேண்டும். தற்போதைய முதலாளியின் கீழ் குறைந்தபட்சம் ஒரு வருடம் வேலை பார்த்திருக்க வேண்டும். அரசு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும். அல்லது சுயதொழில் செய்பவராக இருக்க வேண்டும்.

இந்தியாவில் என்ன வகையான கார் கடன் கிடைக்கிறது?

வணிக வாகன கடன் கிட்டத்தட்ட அனைத்து வகையான சிறிய மற்றும் நடுத்தர கார்களுக்கும் கிடைக்கிறது. மேலும் இந்தியாவில் கிடைக்கும் கார் கடன்களில் ஸ்போர்ட்லெஸ், யூட்டிலிட்டி வாகனங்கள் மற்றும் மல்டி ஆகியவையும் அடங்கும். அதுமட்டுமல்லாமல், நம்நாட்டில் கிடைக்கும் அனைத்து வகையான கடன்களும் மிகவும் பாதுகாப்பானது. மேலும் உங்களுடைய ஆண்டு வருமானம் கார் வாங்கினால் திருப்பி செலுத்தும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளும் எதிர்பார்க்கும். அந்த அளவிற்கு உங்களுடைய வருமானம் இல்லை என்றால் நீங்கள் இணை விண்ணப்பதாரர் அல்லது உத்தரவாதம் வழங்குபவரின் உதவியை நாட வேண்டியிருக்கும். மேலும் கார் கடனை திருப்பிச் செலுத்தும் கால அளவு 12 மாதங்கள் முதல் 84 மாதங்கள் வரை இருக்கும்.

Categories

Tech |