மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய ஆயுதங்கள் சுமார் 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மன்னரான நெப்போலியன் போனபார்ட், “மாவீரன்” என அழைக்கப்படுகிறார். இவர் வாழ்ந்த காலகட்டத்தில் சிறந்த ராணுவ தளபதியாகவும், அரசியல் தலைவராகவும் திகழ்ந்தார். பல ஐரோப்பிய நாடுகளுடன் போர் தொடுத்து வெற்றி கண்டவர். கடந்த 1799 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதியன்று ஆங்கிலேய கப்பல்கள் பிரஞ்சு கடற்படையிலிருந்து வெளியேறியது.
அப்போது, நெப்போலியன் அவரது படைகளோடு சென்று ஆட்சியைக் கவிழ்த்தார். அந்த சமயத்தில், அவர் பயன்படுத்திய வாள், ஆயுதங்கள்மற்றும் உடை போன்றவை அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது. அவரின் ஆயுதங்களும், வாளும் சுமார் 1.5 மில்லியனிலிருந்து 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை மதிப்பிடப்பட்டது. ஆனால் இவை 2.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.