படகு சவாரி செய்து கொண்டிருந்த பெண்ணின் காலை முதலை பிடித்து அவரை தண்ணீருக்குள் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த எமிலி என்ற பெண் தனது நண்பர்களுடன் தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவிற்குச் சென்றிருந்தார். இந்நிலையில் விக்டோரியா அருவியின் அருகே எமிலி தன்னுடைய நண்பர்களுடன் படகுசவாரி சென்றார். அப்போது படகின் அருகிர வந்த முதலை திடீரென எமிலியின் காலை கவ்வி பிடித்து அவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்று விட்டது. இதனால் எமிலியை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் அவரது நண்பர்கள் திகைத்து நின்றனர்.
அதன்பின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து முதலையை தாக்கத் தொடங்கியதால் அது எமிலியின் காலை தன் பிடியிலிருந்து விடுவித்தது. இதனையடுத்து அவரது நண்பர்கள் எமிலியை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இவ்வாறு எமிலியை தாக்கிய 10 அடி நீளம் உள்ள முதலை ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நைல் முதலை என்று அழைக்கப்படுகிறது. இந்த இனத்தைச் சேர்ந்த முதலைகள் மிகவும் பயங்கரமான குணம் கொண்டவை ஆகும்.
மேலும் இது தனது எதிரில் பார்வையின் வரம்புக்குள் இருக்கும் எல்லா மிருகத்தையும் தாக்கும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த பயங்கர முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட எமிலி உயிர் பிழைத்தது அதிசயமாக இருக்கிறது. இவ்வாறு முதலையின் பிடியில் சிக்கிய எமிலியை அவரது நண்பர்கள் மீட்டு உடனடையாக மருத்துவமனையில் அனுமதித்ததால் அவர் உயிர் தப்பினார். மருத்துவர்களின் சிகிச்சையால் எமிலியின் காயங்கள் விரைவில் குணமாகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.