இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் 8,439 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை இறுதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் 8,439 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனிடையில் ஒரே நாளில் 9,525 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 93,733 பேர் பாதிக்கப்பட்டு மருவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றில் குணமடைந்தோர் சதவீதம் 98.36 என்ற அளவில் இருக்கிறது. இதனையடுத்து ஒரே நாளில் கொரோனாவால் 195 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,73,757-ல் இருந்து 4,73,952 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 129.54 கோடியாக உள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.