ஐசிசி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .
ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட் தொடரில் சிறந்து விளங்கும் வீரர் , வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாத ஐசிசி விருது பட்டியலில் ஆடவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், நியூசிலாந்து வீரர் டிம் சவுதி மற்றும் பாகிஸ்தான் வீரர் அபித் அலி ஆகிய மூவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது அதேபோல் மகளிர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீராங்கனை ஆனம் அமின், வங்காளதேச வீராங்கனை நஹிதா அக்தர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .
இதனிடையே சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்வதற்கு டேவிட் வார்னர உங்கள் இப்போ முக்கியமாக இருந்தது. அதேபோல் வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அபித் அலி 133 ரன்னும், 2-வது இன்னிங்சில் 90 ரன்னும் எடுத்தால் இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .அதே போல் இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக டிம் சவுதி கேப்டனாக பொறுப்பேற்றார் .அதோடு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய காரணத்தால் இவரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.