ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியுள்ளது .இதில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் – ஹசீப் ஹமீது ஜோடி களமிறங்கினார் .இதில் ரோரி பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார் .இதன் பிறகு களமிறங்கிய டேவிட் மாலன் (6 ரன்),கேப்டன் ஜோ ரூட் (0), பென் ஸ்டோக்ஸ் (5 ரன்) ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 59 ரன் மட்டுமே எடுத்தது இதைத் தொடர்ந்து ஆட்டம் நடைபெற்றது. இதன் பிறகு களமிறங்கிய ஓலி போப் -ஜோஸ் பட்லர் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர்.இதில் ஜோஸ் பட்லர் 39 ரன்னில் வெளியேற அவரைத் தொடர்ந்து ஓலி போப் 35 ரன்னில் வெளியேறினார். இறுதியாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்துள்ளது .இதில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் . இதைத்தொடர்ந்து ஜோஸ் ஹாசில்வுட் , மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.