இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த வந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேற்றை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடகவில் 149 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒமிக்ரான் வைரஸ் தொற்றாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் ஷிமோகாவில் உள்ள நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாநில முதல்வர் சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு கொரோனா பரவல் அதிகம் பரவி வருவதால் பள்ளிகளை மூட உத்தரவிட்டு உள்ளார். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.