ஒமைக்ரான் தொற்று குறித்து மருத்துவ கழகத்தலைவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் தொற்றானது முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க மருத்துவக் கழகத்தின் தலைவரும் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருமான ஏஞ்சலிக் கூட்ஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது ” ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த இரண்டு வாரங்களாக தலை, தொண்டை மற்றும் உடம்பு வலி போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. அதிலும் இத்தொற்றின் அறிகுறிகள் டெல்டா வைரஸின் அறிகுறிகளில் இருந்து வேறுபட்டு காணப்படுகின்றன.
மேலும் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கலாம். குறிப்பாக நுகரும் மற்றும் சுவை உணரும் திறன் இந்த தொற்றினால் இழக்கப்படுவதில்லை. இந்த நோய் தொற்றிற்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜனும் தேவைப்படுவதில்லை.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது என்ன நேரும் என்று கூறமுடியவில்லை. குறிப்பாக இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான தசை வலி உண்டாகிறது. அதிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை அதிகமாக இது தாக்குகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு கடுமையான சோர்வு ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்