Categories
மாநில செய்திகள்

ரூ.1000,00,00,000 வரி ஏய்ப்பு…! வசமாக சிக்கிய சரவணா ஸ்டோர்…. அதிரடி காட்டிய IT ….!!

சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் 1,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகக் எழுந்த புகாரின் அடிப்படையில், அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 4 நாட்கள் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு செய்த பலகோடி ரூபாய் பணத்தை தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்ததால், இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

புரசைவாக்கம் பகுதியில் சூப்பர் சரவணா ஸ்டோஸ்டோருக்கு சொந்தமான 3 இடங்கள், தியாகராய நகரில் 3 இடங்கள் என 37 இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனை முடிவில் அந்த நிறுவனம் 1,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக விற்பனையை குறைத்துக்காட்டி வரிஏய்ப்பு நடைபெற்றுக் வந்திருப்பதாகவும், 150 கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் வராத ஆடைகள், நகைகள் வாங்க பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சோதனையின்போது, கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கமும், 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறையினர், இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |