ஓமிக்ரான் வைரஸை தடுக்க பூஸ்டர் தடுப்பூசியளிப்பது தொடர்பில் உலக சுகாதார மையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த 2019 ஆம் வருடம் தோன்றிய கொரோனா தொற்று, பல வகைகளாக உருமாற்றமடைந்து பரவி வருகிறது. இந்நிலையில் ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு, சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பரவி வருகிறது.
எனவே, இந்த ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அளிப்பது தொடர்பில் டெல்லியில் நிபுணர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். அதில் நிபுணர்கள், வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். எனவே, எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு, பூஸ்டர் தடுப்பூசி அளிப்பது தொடர்பில் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதன்பின்பு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.