அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினைத்தை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ஒன்றிய செயலாளர் ஆண்டி, நகர செயலாளர் ஜோதிமுருகன், தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
மேலும் கட்சியின் நிர்வாகிகள் தமிழன், தளபதி, கோமதி கோமதி உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதனைதொடர்ந்து பெரியகுளத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதேபோல் பா.ம.க சார்பில் கோட்டூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், ஆதித்தமிழர் பேரவை சார்பில் அரண்மனைப்புதூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.