2022 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து அதன் தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 குரூப் 2A மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த விபரங்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டுள்ளார். சுமார் 5831 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் வரும் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி மூலமாக 32 தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் அனைத்தையும் தெளிவாக வெளியிட்டுள்ள டிஎன்பிஎஸ்சி, இந்தத் தேர்வுகள் அனைத்தும் அப்ஜெக்டிவ் முறையில் நடத்தப்பட்டு டிஜிட்டல் முறையில் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்படும் என கூறியுள்ளது.
மேலும் விடைத்தாள்களை கொண்டு செல்லும் வாகனங்களில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கு அந்த வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் என கூறியுள்ளது. மேலும் ஓஎம்ஆர் விடைத்தாள்களில் தேர்வர்கள் தனிப்பட்ட விபரங்கள் அனைத்தும் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு பின்னரே அது திருத்தும் பணிக்கு அனுப்பப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.