Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாமா….? நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்து…. இன்றைய ஆலோசனையில் தீர்வு கிடைக்குமா…?

கொரோனாவிற்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பரிசீலிப்பது தொடர்பில் உலக சுகாதார மையம் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 23 நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு, ஒமிக்ரானை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிபுணர்கள் பங்கேற்றனர்.

அதில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது நிபுணர்களுக்கிடையே வெவ்வேறான கருத்துக்கள் இருந்தது. இதில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்று பலர் கூறினர்.

கொரோனா தொற்று பரவலை பொறுத்து, அடுத்தகட்ட தீர்மானத்தை மேற்கொள்ளலாம் என்று நிபுணர்கள் சிலர் கூறினர். ஒரு சில நிபுணர்கள் தான் பூஸ்டர் தடுப்பூசியை உடனடியாக மத்திய சுகாதாரத்துறை தொடங்க வேண்டும் என்று தெரிவித்தனர். நிபுணர்கள் இவ்வாறு வெவ்வேறான கருத்துக்களைக் கூறியதால், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி, பரிசீலனை செய்வது தொடர்பில் உலக சுகாதார மையம் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறது. அதன்பின்பு, மேற்கொள்ளப்படும் முடிவுகளுக்கு பின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |