Categories
மாநில செய்திகள்

‘ஜெசி’ யை காணவில்லை….. கண்டுபிடித்தால் ரூ. 5000… கோவையை கலக்கி வரும் பூனையின் போஸ்டர்….!!!

கோவையில் காணாமல்போன பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 5000 ரூபாய் பணம் வழங்குவதாக வித்தியாசமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை ராமநாதபுரம், திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் தனது வீட்டில் வெளிநாட்டு வகை பூனை ஒன்றை கடந்த ஆறு வருடங்களாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி இந்த பூனை காணாமல் போனது. இதனை தொடர்ந்து பல இடங்களில் தேடியும் பூனையை கண்டுபிடிக்க முடியாததால் ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில் காணாமல் போன பூனை குறித்து தகவல் அளித்தால் அல்லது  கண்டுபிடித்துக் கொடுத்தால் 5,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பூனையின் உதட்டில் மச்சம் இருக்கும் என்றும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |