Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முட்புதருக்குள் கவிழ்ந்த கார்…. தாத்தா-பேரனுக்கு நடந்த விபரீதம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

கார் முட்புதருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடக்கு தாமரை குளத்தில் இருந்து கீழ மணக்குடி நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. இந்த கார் ஆண்டிவிளை பகுதியில் வைத்து உப்பள சூப்பிரண்டு அலுவலகத்தில் நிலைத்தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன்பின் கார் மதில் சுவரை உடைத்து கொண்டு சுமார் 200 மீட்டர் தூரமுள்ள முட்புதருக்குள் விழுந்து கவிழ்ந்துவிட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கார் கண்ணாடியை உடைத்து படுகாயம் அடைந்த முதியவர் மற்றும் ஒரு வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே முதியவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் அட்டக்குளம் பகுதியில் வசித்த ஓய்வு பெற்ற போதகரான அய்யா பிள்ளை என்பது தெரியவந்துள்ளது. அந்த வாலிபர் அய்யா பிள்ளையின் பேரனான செல்வின் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த தென்தாமரைகுளம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |