தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழ்நாடு மற்றும் இலங்கை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல்லில் கனமழையும் தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது. டிசம்பர் 8-ஆம் நாள் கடலூர், ராமநாதபுரம் புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழையும், கடலோர மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.