சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு பிரிவிலும் 50 வெற்றிகளை பெற்றுள்ள முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை விராட்கோலி படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .
Congratulations @imVkohli. The first player with 50 international wins in each format of the game.#TeamIndia pic.twitter.com/51zC4hceku
— BCCI (@BCCI) December 6, 2021
இதையடுத்து நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது . இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு பிரிவிலும் 50 வெற்றிகளை பெற்றுள்ள முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது .இதைத் தொடர்ந்து வருகின்ற 26-ம் தேதி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.