ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5 பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை திருத்தி அவை அனைத்தும் ஒரு வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் 2 மொபைல் சேவை வழங்கும் படி செய்துள்ளது. ஜியோ நிறுவனம் கடந்த வாரம் தனது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், மேற்குறிப்பிட்ட 5 ரீசார்ஜ் திட்டங்களும் முறையாக சேர்க்கப்படவில்லை. அதே சமயம் ஒரே ஒரு ஜியோ ரீசார்ஜ் மட்டுமே டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைலை அதன் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கு வழங்கியது. மொத்தமுள்ள ஐந்து திட்டங்களில் குறிப்பிட்ட ஓடிடி சந்தா தற்போது இலவசமாக கிடைக்கிறது. இருந்தாலும் கூட திருத்தப்பட்ட 5 திட்டங்களில் விலைகள் சுமார் 20 சதவீதம் விலை உயர்வை பெற்றுள்ளது.
பழைய விலை ரூ.499, புதிய விலை ரூ.601:
ஜியோ தளத்தில் ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 3ஜிபி அதிவேக டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தாவை உள்ளடக்கியது, இதற்கு முன்னதாக ரூ.499 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்தது. இந்தத் திட்டம் கூடுதலாக 6ஜிபி அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது மற்றும் வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகின்றது.
பழைய விலை ரூ.666, புதிய விலை ரூ.799:
இந்த பட்டியலில் அடுத்தது ரூ.799 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஆகும். இதன் முந்தைய விலை ரூ.666 ஆகும். இது வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ்களுடன் செல்லுபடியாகும் மொத்த 56 நாட்களுக்கும் டெய்லி 2ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இதில் வருடாந்திர டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் அடங்கும்.
ஜியோ அதன் ரூ.888 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தையும் திருத்தி, தற்போது ரூ.1,066 க்கு கிடைக்கிறது. நன்மைகளை பொறுத்தவரை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலின் வருடாந்திர சந்தா, டெய்லி 2ஜிபி அதிவேக டேட்டா, கூடுதலாக 5ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
பழைய விலை ரூ.2599- புதிய விலை ரூ.3119:
இதில் அடுத்தது ரூ.3,119 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம். முன்னதாக இது ரூ.2,599 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்தது. நன்மைகளை பொறுத்தவரை இது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. 2ஜிபி டெய்லி மற்றும் 10ஜிபி கூடுதல் டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் செல்லுபடியாகும் மொத்த 365 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.
அடுத்து டேட்டா-ஒன்லி பேக் ஆன ரூ.549 பிளானையும் திருத்தியுள்ளது. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தற்போது ரூ.659 க்கு கிடைக்கும். இது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. மேலும் டெய்லி 1.5ஜிபி அளவிலான டெய்லி டேட்டா அணுகலை மொத்தம் 56 நாட்களுக்கு வழங்குகின்றது. Google Pay மற்றும் Paytm உள்ளிட்ட மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் ஆதாரங்களும் இந்த திருத்தத்தை பிரதிபலிக்கின்றன.