தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில் பள்ளிகள் அனைத்தும் முற்றிலுமாக மூடப் பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. பின்னர் பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் கீதாஜீவன், கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் நிலை குறித்து BMI உடல்நிலை குறியீட்டு பரிசோதனை நடத்தி ஊட்டச்சத்தை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.