Categories
மாநில செய்திகள்

ALERT : மக்களே….! மீண்டும் சென்னையில் மழை…. வானிலை எச்சரிக்கை…!!!

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து ஓய்ந்து, மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் மீண்டும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தமிழ்நாடு மற்றும் இலங்கை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 6ஆம் தேதியான இன்று திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. டிசம்பர் 7ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் பல இடங்களில் மிதமான மழை பெய்தது.

Categories

Tech |