Categories
தேசிய செய்திகள்

கணவன் தைத்து கொடுத்த ஜாக்கெட்…. தற்கொலை செய்து கொண்ட மனைவி…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

கர்நாடகா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு வீடாகச் சென்று புடவை மற்றும் பிளவுஸ் துணி வியாபாரம் செய்து வருவது மட்டுமல்லாமல் வீட்டிலிருந்தே துணி  தைத்து கொடுத்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சீனிவாசன் தனது மனைவிக்காக நேற்று பிளவுஸ் தைத்துக் கொடுத்துள்ளார். அந்த பிளவுஸ் அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லை.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கணவரிடம் தன்னுடைய விருப்பபடி மீண்டும் தைத்து தர வேண்டும் என்று விஜயலட்சுமி கேட்டார். ஆனால் அவர் அதனை மறுத்து விட்டு கடைக்குச் சென்று விட்டார். குழந்தைகள் பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது விஜயலட்சுமி படுக்கை அறையை பூட்டி இருப்பதை கண்டு திறக்க பல முயற்சிகள் செய்தும் திறக்க முடியவில்லை என்பதால்  சீனிவாசனுக்கு குழந்தைகள் தகவல் அளித்துள்ளார்.

உடனே அவர் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றபோது திறக்கப்பட முடியவில்லை. நீண்ட நேரதிற்கு  பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவருடைய மனைவி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |