எள் சாதம் தயார்செய்யும் முறை
தேவையான பொருள்கள் ;
● பச்சரிசி 2 கப்
● வெள்ளை 4 டேபிள் ஸ்பூன்
● காய்ந்த மிளகாய் 4
● கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
● பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
● நல்லெண்ணெய் 4 அல்லது 5 டீஸ்பூன்
● உப்பு தேவையான அளவு
சாதத்தை குழைய விடாமல் பொலபொலவென்று வேகவைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
வெறும் வாணலியில் எள்ளை போட்டு சற்று சிவக்க வதக்கவும் பின்னர் அதை அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடலைப்பருப்பு மிளகாய் பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வருத்து எடுத்து ஆறவிடவும்.
பின்னர் இதனுடன் வறுத்த எள், உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாகப் பொடி செய்யவு .பொடியை சாதத்தின் மேல் தூவி சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கிளறிவிடவும்.
எள் பொடி முன்பே செய்து வைத்து கொண்டால் தேவை படும்போது சாதத்தில் சேர்த்து கிளறிக் கொள்ளலாம்.
இப்போது எல் சாதம் தயார்.