Categories
மாநில செய்திகள்

JUSTIN : பச்சிளம் பெண் சிசு கொலை…. தாய் கைது….!!!!

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிவறையில் பெண்சிசு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கழிவறையை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது  கழிவறை தண்ணீர் தொட்டியில் தொப்புள் கொடி கூட அறுகாத பெண் குழந்தை ஒன்று கிடந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கானபிரிவு இல்லாததால் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை மருத்துவமனைகளில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குழந்தையை பெற்று ஃபிளஷ் டேங்க்கில் வைத்து கொல்லப்பட்ட விவகாரத்தில் தாயை கைது செய்துள்ளனர். முறையற்ற உறவில் குழந்தை பிறந்ததால் அதனை கொன்றதாக அக்குழந்தையின் தாய் பிரியதர்ஷினி விசாரணையில் தெரிவித்துள்ளார்

Categories

Tech |