ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது .
6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி தென் கொரியா நாட்டில் டாங்கே நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் தென்கொரியா ,இந்தியா , சீனா,ஜப்பான் ,தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.இறுதியில் லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதனிடையே நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தனது முதல் போட்டியில் தாய்லாந்து அணியுடன் மோதியது .
இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்த் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது .இதில் அணியில் குர்ஜித் கவுர் 5 கோல் அடித்து அசத்தினார் .இதையடுத்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் தென் கொரியா அணிகள் மோதியது .இதில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது.இந்நிலையில் மலேசியா அணியில் வீராங்கனை ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அந்த அணி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது .இதனால் அந்த அணி முதல் 2 நாட்களில் போட்டியில் பங்கேற்காது என ஆசிய ஹாக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.