Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

தடுப்பூசி போடாதவர்களுக்கு தடை….. அரசு அதிரடி உத்தரவு ….!!!

தடுப்பூசி போடாதவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதற்கு தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது

இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. இருப்பினும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் என்ற பெயருடன் பல உலக நாடுகளில் தீவிரமாகப் பரவுகிறது. இந்தியாவிலும் இன்று தொற்று பல மாநிலங்களில் பரவியுள்ளது. இந்தியாவில் இந்த  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மாநில அரசுகள் போட்டி போட்டு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் புதுச்சேரி அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி பொதுஇடத்தில் நடமாடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. அதுபோல தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் வீட்டைவிட்டு வெளியில் செல்ல தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |