புதிய ரேஷன் கார்டுகள் தொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் அருமையான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருவாரூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். இதில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் ஊனமுற்றோருக்கு நாற்காலி, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் 17 பேருக்கு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :”கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் மூன்று லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 800 மெட்ரிக் டன் நெல் அரைக்கின்ற வகையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு அரிசி ஆலை நிறுவப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 தினங்களுக்குள் வழங்கப்படும். அந்த வகையில் இதுவரை 7 லட்சத்து 52 ஆயிரம் நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.