தேனியில் சாலையில் வாகனங்களை நிறுத்தி, முகக்கவசம் அணியாத பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டதுடன், அவர்களுக்கு தண்டம் விதிக்கவும் உத்தரவிட்டார்.
கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வதுடன் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி கடிந்து கொண்ட ஆட்சியர், அரசு நகர பேருந்தை நிறுத்தி பேருந்துக்குள் ஏறி முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு தண்டம் விதிக்க சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.