Categories
தேசிய செய்திகள்

பறவைகள் மீது தீராத காதல்…. வித்தியாசமான திருமண அழைப்பு…. வியக்க வைத்த குடும்பம்….!!!

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் சிவபாய் ராஜிபாய் கோஹில் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெயேஷ். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. சிவபாய் தனது மகனின் திருமணத்தில் ஏதாவது வித்தியாசமாக செய்யப்பட வேண்டும் என்று திருமணத்திற்கு அழைப்பிதழை வித்தியாசமாக செய்து உள்ளார். அதாவது பறவைகளின் கூடு போன்ற அழைப்பிதழை தயார் திருமணத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தனது மகனுடன் கலந்து ஆலோசனை செய்து இருவரும் இணைந்து திருமண அழைப்பிதழை பறவைகளின் கூடு கொண்டு தயார் செய்து விருந்தினருக்கு தங்கள் திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தந்தை மற்றும் மகன் கூறியது, நாம் மற்றவருக்கு ஏதாவது கொடுத்தால் அது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற சிந்தித்தோம். அது மட்டுமில்லாமல் எங்கள் வீட்டில் பறவைகளுக்காக கூடு வைத்துள்ளோம் என்றும் பறவைகள் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |