குடிக்க தண்ணிர் கேட்டு 13 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் கஞ்ஜிரப்பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் (டிசம்பர் 5) மாலை தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார் அந்த சமயம் அங்குவந்த அருண் சுரேஷ் என்ற( 25) வயது வாலிபர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் போய் தனக்கு தாகமாக இருப்பதாகவும் குடிக்க சிறிது தண்ணீர் தருமாறு கேட்டுள்ளான். அந்த சிறுமி தண்ணீரை எடுப்பதற்காக சமையறைக்கு செல்லும்போது இந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பின்தொடர்ந்து வீட்டுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டான்.

இதையடுத்து, சிறுமி தனது பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த கொடூரத்தை விவரித்தார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரையடுத்து போலீசார் குற்றவாளியான சுரேஷை மிகவும் தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் குற்றவாளியான சுரேஷ் கோட்டயத்தில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் பதுங்கியிருந்தார். போலீசார் இன்று அவனை கைது செய்தனர். மேலும், இந்த கொடூர செயலைசெய்த குற்றவாளி சுரேஷ் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.