விவசாயியை கொலை செய்த வாலிபர்களை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பாராட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியனை அடுத்துள்ள கிளியூர் கிராமத்தில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது வயலில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து திருநாவுக்கரசு வயல்வெளியில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் உயிர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியிலடனர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் திருநாவுக்கரசு உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் திருநாவுக்கரசை கொலை செய்தது கொளுவூர் பஞ்சாயத்து தலைவரின் மகன் ஜீவானந்தம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஜீவனந்தத்திற்கும், திருநாசுசரசுக்கும் ஏற்கனவே முன்பாக இருந்ததாகவும், அதனால் அவரை கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த கிளியூர் பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்ற வாலிபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.