நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததையடுத்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ் பரவல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ, மாணவர்களுக்கான வகுப்புகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆன்லைன் வகுப்புகள் மூன்று நாட்களுக்கும், ஆப்லைன் வகுப்புகள் மூன்று நாட்களுக்கு நடைபெறும். மேலும் நேரடி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டுமானால் பெற்றோர்களுடைய அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.