Categories
மாநில செய்திகள்

BREAKING : வெங்கடாசலம் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்….  ஈபிஎஸ் வலியுறுத்தல்….!!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக அதிமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 24ஆம் தேதி வெங்கடாசலம் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் கணக்கில் காட்டப்படாத பல பொருட்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் சென்னை வேளச்சேரியில் மனைவியுடன் வசித்து வந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வெங்கடாச்சலம் தற்கொலையில் எந்த சந்தேகமும் இல்லை என்று சென்னை மாநகர காவல் ஆணையர் விளக்கமளித்தார். அதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது ‘காவல்துறையினர் சட்டப்படியும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும். அரசியல் பழி வாங்குவதற்காக காவல்துறையை தவறாக பயன்படுத்தும் போக்கை கைவிட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |