Categories
தேசிய செய்திகள்

2-வது டோஸ் போடுங்க….. ஸ்மார்ட் போனை வெல்லுங்க….. வெளியான கவர்ச்சிகர அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது.  கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் 2-வது டோஸ் 12 வாரங்களில் இருந்து 14 வாரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். கோவேக்சின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் 28 நாட்களுக்குப் பிறகு 2-வது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஆனால் இந்தியாவில் முதல் டோஸ் போட்டவர்கள் பெரும்பாலானவர்கள் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ளவில்லை.

மேலும் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டுமே மிகவும் நல்லது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கு முயற்சி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகராட்சி டிசம்பர் 4ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 10ஆம் தேதிக்குள் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் பெயர்கள் சேகரிக்கப்பட்டு குலுக்கல் போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு 50 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் போன் பரிசாக வழங்கப்படும் என்று அப்பகுதியின் நகராட்சி கமிஷனர் அமித் ஆரோரா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |