தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 9-12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே மூன்று மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.