ரேபிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட வெறிப்பிடித்த நாய் பள்ளி குழந்தைகளை கடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலமான ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜஹான்பூர் கிராமத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 10 குழந்தைகளை ரேபிஸ் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் கடித்தது. இந்த நாய் கடித்த 10 குழந்தைகளில் சாதிக், மஹாக், இன்ஷா, ஷ்யாம் ஆகிய 4 பேரும் உடனடியாக அரசு சுகாதார மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைகளை நாய் கடித்ததால் கோபமடைந்த அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் நாயை கொன்று விட்டனர். இதனால் ஜகான்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.