Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி…. அதிகாரப்பூர்வ செய்தி…!!!!

டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக நேற்று தென்னாப்பிரிக்காவிலிருந்து மஹாராஷ்டிரா திரும்பிய ஒருவருக்கும், ஜிம்பாவே நாட்டில் இருந்து குஜராத் திரும்பிய ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ,தற்போது இன்று ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

Categories

Tech |