Categories
அரசியல் பேட்டி

சிறையில் அடைத்தபோதும் எனது மன வலிமை சிறிதும் குறையவில்லை- பா.சிதம்பரம்..!!

சிறையில் அடைத்த போதும் தனது மன வலிமை சிறிதும் குறையவில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  

ஐ.ன்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 106 நாட்கள் திகார் சிறையில் இருந்த சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது.இதையடுத்து சுமார் 4 மாதங்களுக்கு பிறகு அவர் தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் அவரை  உற்சாகமாக வரவேற்றனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.சிதம்பரம் நிர்பயா  வசதியை பயன்படுத்தி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், என்னை சிறையிலே அடைக்க காரணம் என் மன உறுதியை குலைக்கவே  என்றும்  அனால் என் மன உறுதி ஒருபோதும் குலையாது என்றும் கூறினார்.மேலும் தமிழகத்தில் நிர்பயா நிதி சரியான முறையில் பயன்படுதப்பவில்லை, என்றும் இது வருந்தத்தக்கது எனவும் பா.சிதம்பரம் கூறினார்.

Categories

Tech |