Categories
அரசியல்

பென்சன் வாங்குவோர் நிம்மதி…. இனி எல்லாமே இப்படித்தான்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

ஆயில் சான்றுகளை இனி நேரடியாக சமர்ப்பிக்க தேவையில்லை என்று மத்திய அரசு புதிய வசதி ஒன்றை கொண்டுவந்துள்ளது.

பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயில் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்பிப்பது கட்டாயம். இது ஜீவன் பிரமாண பத்திரம் என்று அழைக்கப்படும். இந்த பத்திரத்தை பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்கவேண்டும். நவம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும்.  இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான அறிவிப்பில் டிசம்பர் 31ம் தேதி காலவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது அவர்களுக்கு நிம்மதியை அளித்தது.

மேலும் பென்சன் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் விதமாக புதிய வசதி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அது என்னவென்றால் பென்ஷன் வாங்கும் நபர்களுக்கு Face Recognition என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முகத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அம்சமாகும். ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக ஏற்கெனவே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த வரிசையில் தற்போது Face Recognition தொழில்நுட்பமும் வந்துள்ளது.

இந்த தொழில்நுட்பம் பென்சன் வாங்குவோரின் ஆயுள் சான்றாக செயல்படும். இதனால் பென்ஷன் வாங்கும் சீனியர் சிட்டிசன் நிம்மதி அடைந்துள்ளனர் . வீட்டிலேயே வந்து ஆயில் சான்றிதழ் பெற்று செல்லும் வசதி, வீடியோ கால் மூலமாக சமர்ப்பிக்கும் வசதியும் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |