Categories
தேசிய செய்திகள்

வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.10,000 கடன்…. அரசிடமிருந்து ஈசியா வாங்கலாம்…. எப்படி தெரியுமா?….!!!

சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வசதி வழங்குவதற்காக கொண்டு வந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா. இந்தத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்த பத்தாயிரம் ரூபாயை ஒரு வருடத்திற்குள் மாதத் தவணைகளாக திருப்பி செலுத்த வேண்டும்.

அவ்வாறு உரிய காலத்தில் இந்த கடனை திருப்பி செலுத்தினால் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக கடனை செலுத்தினாலும் ஒரு ஆண்டிற்கு 7% என்ற அடிப்படையில் வட்டியில் மானியம் வழங்கப்படும் என்பது தகவல் மேலும் நீங்கள் திருப்பி செலுத்தும் கடனை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தினால் வருடத்திற்கு உங்களுக்கு கேஷ்பேக் சலுகைகளும் உண்டு. இந்தக் கடனை பெறுவதற்கு வியாபாரிகள் தங்களுடைய தொலைபேசி எண்ணை ஆதாருடன் இணைத்து இருக்க வேண்டும் மேலும் மார்ச் 24- 2020 ஆம் தேதிக்கு முன்னர் பணிபுரிந்து வரும் சாலையோர வியாபாரிகளுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.

மேலும் இந்தத் திட்டமானது மார்ச் மாதம் 2022-ஆம் ஆண்டு வரை மட்டுமே வழங்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் விண்ணப்பித்து கடன் பெறலாம். அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத வியாபாரிகள் இந்த திட்டத்தின் கீழ் கடன் வாங்குவதற்கு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்பிடம் பரிந்துரைக் கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம். அந்தக் கடிதம் கிடைத்தவுடன் பிரதமரின் சிவா நிதியின் கீழ் கடனுக்காக விண்ணப்பிக்கலாம் தேவை உள்ளவர்கள் பொது சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://pmmodiyojana.in/svanidhi -yojana பெண் என்ற இணையதளத்திலும் சென்று பார்க்கலாம்.

Categories

Tech |