இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைய தொடங்கிய நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மக்களவையின் போது மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பேசியது, இந்தியாவில் இதுவரை 3.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் 4.6 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 1.36 சதவீதமாகும். இந்தியாவின் மக்கள்தொகையில் 10 லட்சம் பேரில் 25 ஆயிரம் பேருக்கு பாதிப்புகள் மற்றும் 340 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.இது உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது மிக குறைவானது என்று தெரிவித்துள்ளார். அதன்பிறகு ஒமிக்ரான் வைரஸ் பற்றி அவர் பேசியபோது, கொரோனா தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ் போடுவது ஆகியவை அரசு அமைக்கும் நிபுணர்கள் அடங்கிய இரண்டு அறிவுரையின்படி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.