மாலியில் பயங்கரவாதிகளால் பஸ் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 33 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனால் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து அந்த நாட்டிலுள்ள மொப்தி மாகாணம் சொவிரி நகரில் இருந்து பென்டிய்ஹரா நகருக்கு நேற்று பஸ் சென்று கொண்டிருந்தது.
அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். அப்போது பயங்கரவாதிகள் சிலர் அந்த பஸ்சை இடைமறித்து டிரைவரை கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பஸ்ஸின் கதவுகளை மூடிய பயங்கரவாதிகள் பயணிகளை உள்ளே அடைத்து விட்டு பஸ்சுக்கு தீ வைத்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 33 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் இராணுவத்தினர் வருவதற்கு முன்பு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.