இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 போட்டியில் இந்தியா விளையாட இருந்தது. இந்நிலையில் இந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்..
உலக நாடுகளை தற்போது ஓமைக்ரான் என்னும் வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. தற்போது 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 300க்கும் மேற்பட்டவர்கள் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டு உள்ளனர்..